Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாநகராட்சி தேர்தலில் மண்ணைக்கவ்விய பாமக

மாநகராட்சி தேர்தலில் மண்ணைக்கவ்விய பாமக
, வெள்ளி, 11 மார்ச் 2022 (00:08 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட 11 வாக்குகள் ஆனால் பாமக வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்று பரிதாப நிலை.
 
புதிய மாவட்ட செயலாளரின் சாதனையில் இதுவும் ஒரு மைல் கல்லா ? பாமக கட்சிக்கு வந்த சோதனை
 
தற்போது நடைபெற்ற நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் பல பல கட்சிகளை சிந்திக்க வைத்தது இல்லாமல், கூட்டணி பலம் கூட இல்லாமல் தனித்து பல கட்சிகளின் பெரும்பான்மையை நிருபணம் செய்ய வைத்துள்ளது. இந்நிலையில், கரூர் நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக முதன்முதலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் பெரும்பான்மை வாக்குகள் இல்லாமல், டெபாசிட் கூட இழக்க வைத்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட வெறும் 11 வாக்குகள் பெற்றது. ஒரு புறம் இருந்தால், பாமக கட்சியோ வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்றது என்றால் அதை விட ஒரு விமர்சனம் பாமக கட்சிக்கு மேலும் ஒரு பரிதாப நிலை தான்
 
கரூர் மாநகராட்சியில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளும், அதிமுக தனித்தும் 48 வார்டுகளிலும் களம் கண்டது. பாஜக கட்சி கூட 43 வார்டுகளில் தனித்து நின்றது. ஆனால் பாமக ஏதோ கண் துடைப்பிற்கு வார்டுகளில் நிற்க வேண்டுமென்று கருதி வெறும் அரசியல் செய்வதற்கு கூட, இல்லாமல், வெறும் 10 இலக்கத்திற்கு குறைவு உள்ள வாக்குகள் வந்துள்ளது பாமக கட்சியின் பரிதாப நிலையை அக்கட்சியின் தலைமைக்கு உணர்த்தியுள்ளது. இதே போல்., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 27 வார்டுகளில் போட்டியிட்டனர். அதே போல், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் 7 வார்டுகளில் போட்டியிட்டனர். தே.மு.தி.க கட்சியானது 13 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், பாமக கட்சி வெறு இரண்டே இடங்களில் மட்டுமே அதுவும் கண் துடைப்பிற்காக மட்டுமே போட்டியிட்டுள்ளது.
 
மேலும், திமுக கட்சியின் அப்போதைய வேட்பாளரும், தற்போதைய மேயர் பதவி வகிக்கும் திமுக வை சார்ந்த கவிதா என்பவர் 4 வது வார்டில் போட்டியிட்டவர் 1988 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் ரஞ்சிதம் கூட 124 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் கூட காலியானது. ஆனால், பாஜக அதே வார்டில் இரண்டாவது இடத்தினை பிடித்ததோடு, 952 வாக்குகள் பெற்று டெபாசிட் வாங்கியுள்ளது. ஆனால், எதிர்த்து நின்ற பாமக கட்சி வேட்பாளர் நித்யா என்பவர் வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அதே வார்டில் நாம் தமிழர் கட்சி 32 வாக்குகள் பெற்றுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி 28 வார்டுகள் பெற்றுள்ளது. அதே போல், 18 வது வார்டில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் 14 வாக்குகள் பெற்றுள்ளார் அதன் வேட்பாளர் ராஜா., ஆனால் அதே வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரேம்குமார் 65 வாக்குகள் பெற்றுள்ளார். அந்த வார்டில் திமுக வேட்பாளர் தங்கராஜ், 1715 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 
 
கரூர் மாவட்ட மேற்கு மாவட்ட செயலாளராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரேம்நாத், இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட்தில் இருந்து ஏராளமான அரசியல் விமர்சனங்கள் அக்கட்சியிலேயே எழும் நிலையில்., கடந்த நகரமைப்பு தேர்தலில் மொத்தமும் அவரது பார்வை படவில்லை என்பதும், பாமக வெற்றிக்கு முழுவதும் பாடுபடவில்லை என்றும், தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு கடுகளவு கூட இல்லாதது தான் அக்கட்சிக்கு வந்த சோதனை என்கின்றனர் பாமக நிர்வாகிகள்,. ஆக, கடந்த நகரமைப்பு தேர்தலில் மற்ற கட்சிகள் கூட பல இடங்களில் நின்று 10 டிஜிட்டிற்கும் மேலான வாக்குகளை பெற்ற நிலையில், பாமக கட்சியோ, மாவட்ட செயலாளர் பிரேம்நாத் ஐ நம்பி கட்சி பொறுப்பை ஒப்படைக்க, வெறும் இரண்டு வார்டுகளில் அதுவும் ஒரு வார்டில் 8 மற்றொரு வார்டில் 14 வாக்குகள் மட்டும் தானா ? பாமக வின் நிலை ? இப்படி இருந்தால் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி கட்சி நிர்வாகிகளும், இந்த வேட்பாளர்களும் கட்சிக்கு பாடுபடுவர் என்கின்றனர் மற்ற கட்சியினர். எது எப்படியோ மாநகராட்சி தேர்தலில் பாமக கட்சி மண்ணைக்கவ்வியது உண்மை தான், ஆனால், தற்போது எதற்கும் துணிந்தவன் சூர்யா படத்திற்கு துணிந்த பாமக மாவட்ட செயலாளர் பிரேம்நாத் மாநகராட்சி தேர்தலில் மட்டும் துணியாமல் இருந்தது ஏனோ என்று முனுமுனுக்கின்றனர் இதே கட்சியினரை சார்ந்த நிர்வாகிகள்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்வதேச விமான டிக்கெட் விலை: 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு!