ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜாரில் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தி நகர் பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விசாலமான நடைபாதை, சாலைகள், வணிக வளாகங்கள் நவீன குப்பை தொட்டிகள் ஆகியவற்றிற்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வந்தன.
தற்போது இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று மாலை புதுப்பிக்கப்பட்ட சாலைகளை திறந்து வைத்து மணி அடித்து முதல்வர் பழனிசாமி துவங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர். ”ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் எளிதாக பாண்டி பஜார் பகுதியில் பயணம் செய்யமுடியும்” என கூறினார்.
மேலும், போதிய நிதி ஆதாரத்தை திரட்டி, அனைத்து சாலைகளும் படிபடியாக சீரமைக்கப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.