Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழனியில் ஆதார், வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம்: என்ன காரணம்?

voter id aadhar

Mahendran

, செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (15:48 IST)
பழனி கோயில் அடிவாரத்தில் கடை வைத்திருந்தவர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் திடீரென ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தி வருவதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பழனி கோயில் அடிவாரத்தில் உள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியிருந்த நிலையில் இது குறித்து உயர்நீதிமன்றத்தின் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு செய்த கடைகள், வீடுகள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த உத்தரவின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் பழனி கோயில் அடிவார பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த கடைகள் மற்றும் வீடுகளை அகற்றியது.
 
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென அந்த பகுதிகள் கடை வைத்திருந்தவர்கள், வீட்டில் வசித்தவர்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 
அதன் பின்னர் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையை காவல்துறையினர் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடை! பிரதமர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!