எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நல்லவர், நேர்மையானவர் என்றும் அவரைப் போன்ற ஒரு மனித நேயமுள்ள முதல்வரை பார்க்க முடியாது என்றும், அவர் கண்டிப்பாக வரும் தேர்தலில் வெற்றி பெறுவார் என்றும் தேர்தல் மன்னன் பத்மராஜன் என்பவர் கூறியிருக்கிறார்
குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் கூட்டுறவு சங்க தேர்தல் வரை எந்த தேர்தலாக இருந்தாலும் களத்தில் முதலில் போட்டியிடுபவர் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் என்பவர். இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட தேர்தலில் போட்டியிட்டு உள்ளார் என்பதும் ஒரு தேர்தலில் கூட டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் இவர் ஒரு சில தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவற்றில் ஒன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டாலும் எடப்பாடி பழனிசாமி தான் ஜெயிப்பார் என்றும் அவர் மனித நேயம் உள்ளவர் என்றும் நல்ல களப்பணியாளர் என்றும் அவரைப் போல் ஒரு முதல்வரை பார்க்க முடியாது என்றும் பத்மராஜன் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்