Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடீஸ்வரரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

Advertiesment
கோடீஸ்வரரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!
, செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (13:35 IST)
மருத்துவ சீட்டிற்காக மாணவர்களிடம் இருந்து ரூ.72 கோடி பெறப்பட்ட வழக்கில் பச்சமுத்து கைத்து செய்யப்பட்டுள்ளார்.


 


எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவரான இவர், ஜாமின் கோரி சைதாப்பேட்டை 11 வது நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடியானது.

இதை அடுத்து,  பச்சமுத்து சார்பில், அவரின் உடல்நிலையை காரணம் காட்டி, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மானு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க காவல்துறையினர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. அதனால், இவ்வழக்கு  வரும் 8 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூமியில் 5 வினாடிகள் ஆக்ஸிஜன் இல்லை என்றால் என்ன ஆகும்???