Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்பூவை எதிர்த்த சொந்த கட்சி; வரவேற்ற எதிர்கட்சி

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (20:27 IST)
மத்திய அரசு கொண்டு வர இருக்கும் பொது சிவில் சட்டத்துக்கு குஷ்புவின் கருத்துக்கு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் எதிர்த்தும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பும் தெரிவித்து உள்ளனர்.
 

 
சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னிப்பரிட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பூ, ”பாஜக கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்தை ஆதரித்தும், அது நாட்டுக்கு தேவை” என்றும் கூறியிருந்தார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், குஷ்பூ கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்தல்ல. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார். 
 
இந்நிலையில் குஷ்புவின் கருத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், ”பொது சிவில் சட்டத்தை குஷ்பு ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாற்றுக்கட்சிகளில் இருந்தாலும் அவர் வரவேற்றிருப்பது நல்ல வி‌ஷயம்.
 
மேலும், குஷ்புவை பொறுத்தவரை இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர். பெண்களின் நிலையை நன்றாக உணர்ந்தவர். பொது சிவில் சட்டம் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும். எனவே கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் வரவேற்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments