Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வின் முதலிடம்; அமித் மிஸ்ரா கிடுகிடு உயர்வு!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2016 (19:28 IST)
சர்வதேச தரவரிசைப் பட்டியலில் அஸ்வின் முதலிடத்தையும், அமித் மிஸ்ரா மற்றும் அக்‌ஷர் பட்டேல் முன்னேற்றமும் அடைந்துள்ளனர்.


 

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதன்படி, ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் வரிசையில், தென்ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 861 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் விராட் கோலி 848 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 786 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
 
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் 735 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன் 725 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா அணியின் இம்ரான் தாஹிர் 712 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
 
இந்திய வீரர் அமித் மிஸ்ரா 25 இடங்கள் அதிகரித்து 12-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல மற்றொரு இந்திய வீரர் அக் ஷர் பட்டேல் 5 இடங்கள் உயர்ந்து முதன் முறையாக 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
 
ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் மாற்றம் இல்லை. முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவும், ஒருபுள்ளியை இழந்தாலும் நியூசிலாந்து அணி 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஒரு புள்ளி கூடுதலாக பெற்ற இந்திய அணி 4-வது இடத்திலேயே நீடிக்கிறது.
 
அதேபோல டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments