Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மறுபக்கம் தெரியுமா?

’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் மறுபக்கம் தெரியுமா?
, செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (17:32 IST)
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை.


 


இந்நிகழ்ச்சியில் குடும்பப் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. அதனால் குடும்ப சிக்கல்களில் அகப்பட்டிருக்கும், பல குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் மீது பல புகார்கள் வந்த வன்னம் உள்ளது.

இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சி, ஒருவரின் கருப்பு பக்கத்தை வைத்து பணம் சம்பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு குடும்பப் பிரச்சனை என்று வரும் ஒருவரை, அவர் கொண்டு வரும் பிரச்சனைக்கு மட்டும் தீர்வு சொல்லாமல், அவரின் கருப்புப் பக்கத்தை தெரிந்து கொண்டு, அதை மையப்படுத்தி, நிகழ்ச்சியை எடுத்து ஒளிபரப்பி பணம் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. 99 சதவிகிதம் பிரச்சனை என்று தொலைக்காட்சியை தொடர்பு கொள்பவர் தான், இதில் பலி ஆடு என்றும் கூறுகின்றனர்.

”விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தான் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருவதாக தொலைக்காட்சி தரப்பில் கூறப்பட்டாலும், விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு உயிரை பலி கொடுப்பது எந்த வகையில் நியாயம்” என்றும் கேள்வி எழுகிறது.

”மக்கள் பிரச்சனையை தீர்க்க நீதிமன்றமும், காவல்நிலையமும் இருக்க, மக்கள் பிரச்ச்னையில் நீதி வழங்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

”உண்மையில் அந்த அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கோ அல்லது அந்நிகழ்ச்சியை நடத்தும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கோ மக்கள் மீதும், குடும்பங்கள் மீதும் அக்கறை இருந்தால் அவர்கள் ஏன், ஒரு தனிநபர் அந்தரங்கத்தை உலகம் அறிய செய்து அவர்களை அவமானப்பட வைத்து தற்கொலைக்கு தூண்ட வேண்டும்” என்றும் மனிதநேய அமைப்புகள் சில கேள்வி எழுப்பி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரேமம் படத்தை பார்க்க மாட்டேன்; இது மாமியார் நாகம்மா மேல சத்தியம் : கலக்கல் மீம்ஸ்