சபாநாயகருடன் வாக்குவாதம்; சட்டசபையை விட்டு வெளியேறிய ஓ.எஸ்.மணியன்

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (19:45 IST)
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதற்கு விளக்க அளிக்க முயன்ற ஓ.எஸ்.மணியனுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

 
சட்டசபையில் ஆளுநர் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலிம் பேசியதற்கு கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால் சபாநாயகர் அவரை பேச அனுமதிக்கவில்லை.
 
ஆளுநர் குறித்து இங்கு விவாதிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவரிடம் சொல்லிவிட்டேன். அதனால் அதுதொடர்பாக பேசி புதுப்பிரச்சனைக்கு போக வேண்டாம் என்று சபாநாயகர் கூறியுள்ளார். 
 
நான் என்ன சொல்ல வந்தேன் என்று கேட்காமலேயே என்னை பேச வேண்டாம் என்கிறீர்கள் என்று சபாநாயகரை பார்த்து ஓ.எஸ்.மணியன் கேட்டுள்ளார். இதையடுத்து சபாநாயகருக்கும், ஓ.எஸ்.மணியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
கோபத்தில் இருக்கையில் அமர்ந்த ஓ.எஸ்.மணியன் பின்னட் எழுந்து வெளியே சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments