Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் மெரிட் எம்பிபிஎஸ்: தமிழிசையின் சவாலை ஏற்ற அன்புமணி ராமதாஸ்!

Advertiesment
தமிழிசை
, புதன், 27 ஜூன் 2018 (16:48 IST)
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவருவதற்கான திட்டத்தை முதலில் யார் கொண்டு வந்தது என்பது குறித்து அன்புமணி ராமதாஸுக்கும் தமிழிசைக்கும் மோதல் உருவானது. இதனையடுத்து ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துக்கொண்டனர். 
 
இது குறித்து தமிழிசை, அன்புமணி ராமதாஸ், என்னை தலைவராக இருக்க தகுதி இருக்கின்றதா எனக் கேட்கிறார். 20 ஆண்டுகால கடின உழைப்பு, அறிவாற்றல், தேசிய பண்பு இருப்பதால்தான் தேசியக் கட்சியின் தலைவராக வந்திருக்கிறேன். யார் அறிவாளி என என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா? என தமிழிசை சவால் விட்டார். 
 
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் தமிழிசையில் சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் மெரிட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். தமிழிசை பரிந்துரையின் பேரில் எம்பிபிஎஸ் படித்தவர். அதனால் தமிழிசை சவுந்தரராஜன்தான் அறிவாளி என்பதை நானே ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் யார் அறிவாளி என விவாதம் நடத்த நான் தயார் என தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக கூட்டணியிலிருந்து விலகினால் எங்கள் ஆதரவு கிடைக்கும்; விவசாயிகள் சங்கம் அறிவிப்பு