Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (16:25 IST)
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நீலகிரி தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது/ இந்த நான்கு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, , அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்,வேலூர்,புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 22 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அதேபோல் நாளை அதாவது அக்டோபர் 10ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தென்காசி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments