Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி கூட்டணிக்கு ஆதரவு; பிரதமரை சந்திப்பேன்? – ஓபிஎஸ் ப்ளான் என்ன?

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (12:35 IST)
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர தயார் என டிடிவி தினகரன் கூறியதை ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதுகுறித்து பரபரப்புகள் இப்போதே எழ தொடங்கிவிட்டன. இதற்கிடையே அதிமுகவில் உட்கட்சி சிக்கல் இன்னும் தீராமல் இருப்பதால் அதிமுக நாடாளுமன்ற தேர்தலை எப்படி திட்டமிடப்போகிறது என்ற கேள்வியும் இருந்து வருகிறது.

சமீபத்தில் அதிமுக ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைய உள்ளதாக பேசியிருந்தார். கூட்டணியில் சீட்டு போடும் வகையில் பேசியுள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், அதிமுக கூட்டணி அமைத்தால் அதில் இணைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ: ’எனது பூத் வலிமையான பூத்’; அண்ணாமலையில் அரசியல் ப்ளான்!

டிடிவி தினகரனின் இந்த கருத்தை ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘அதிமுகவில் அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையாகவே உள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரவுள்ள பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். திமுகவும், அதிமுகவும் அண்ணன், தம்பிதான். ஆனால் அரசியலில் நாங்கள் மாறுபட்ட பாதையில் பயணிக்கிறோம்” என கூறியுள்ளார்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments