Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நொந்துப்போய் பேசிய ஓபிஎஸ்

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (13:30 IST)
நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இடையே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலை என ஓபிஎஸ் கருத்து. 
 
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளான் சட்ட திருத்த மசோதாக்களைக் கொண்டு வந்தது. இது விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதராவாகவும் இருப்பதாகவும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்துவந்தாலும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
 
இந்நிலையில் இன்று சட்டசபையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் போது அதிமுக மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்தனர்.  இதனிடையே துரைமுருகன் ஓபிஎஸ் குறித்து பேசியது அவருக்கு மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது நிலையை கண்ணதாசன் பாடல்வரிகளைக் கொண்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார். ஆம், தம்முடைய தனிப்பட்ட நிலையை எண்ணும்போது ஒரு பாடல் வரி நினைவுக்கு வருவதாகவும், அது. நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இடையே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! பதிலடி கொடுத்த ராஜீவ் சந்திரசேகர்!

சென்னையில் இன்று இரவு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments