Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரும் யாருக்கும் அடிமை இல்ல.. கொத்தடிமையும் இல்லை! – ஓபிஎஸ் ட்வீட்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (14:02 IST)
யாரும் யாருக்கும் அடிமை இல்லை.. தமிழகத்தை கொத்தடிமை இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என துணை முதல்வர் ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் பல ஆண்டு காலமாக தேயிலை தோட்டங்கள், கல் குவாரிகள் என பல இடங்களில் கொத்தடிமை முறை இருந்த நிலையில் அவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டதுடன் ஒழிக்கப்பட்டும் வருகிறது. ஆனால் இன்னமும் பல பகுதிகளில் இந்த கொத்தடிமை முறை சட்டத்திற்கு புறம்பாகவும் நடந்து வரும் நிலையில் அடிக்கடி அரசு அதிகாரிகள் அவற்றை களையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கொத்தடிமை ஒழிப்பு நாள் கொண்டாட்டப்படும் நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் "கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை(Feb-9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன். யாரும் யாருக்கும் அடிமை இல்லை" என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்!” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments