Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

ஆட்டத்தை மாற்றி... பொதுக்குழு கூட்டத்திற்கு கெத்தா வரப்போகும் ஓபிஎஸ்!

Advertiesment
அதிமுக
, வியாழன், 23 ஜூன் 2022 (08:22 IST)
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடக்கிறது. நடக்கும் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.
 
இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை உள்பட தனிப்பட்ட தீர்மானங்கள் எதையும்  நிறைவேற்றக் கூடாது என நேற்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைவராக பொதுக் குழுவில் இருந்து தேர்வு செய்யப்பட முடியாத நிலையில் உள்ளார்.
 
அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேல்முறையீடு செய்யப்போகிறதா ஈபிஎஸ் தரப்பு: ஜெயகுமார் பதில்