எங்கள் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி: ஓ பன்னீர்செல்வம்

Webdunia
புதன், 12 மே 2021 (15:15 IST)
கொரோனா நேரத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து சேவை செய்துவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று நாங்கள் அளித்த கோரிக்கைக்கு செவி சாய்த்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சற்றுமுன் தமிழக அரசு மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவம் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம். இந்த ஊக்கத்தொகை அறிவிப்புக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
கொரோனா பேரிடர் காலத்தில் உயிர் காக்கும் உன்னத சேவை புரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்க வேண்டுமென்று சில தினங்களுக்கு முன்பு நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஊக்கத்தொகையை அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 20ல் புதிய கட்சியை தொடங்குகிறார் மல்லை சத்யா.. திராவிடத்தில் இன்னொரு கட்சியா?

மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் தற்காலிக நிறுத்தம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஷேக் ஹசீனா குற்றவாளி.. அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு..!

பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ராஜினாமா.. மீண்டும் பதவியேற்பது எப்போது?

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments