Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெ. மரணத்தில் ஓ.பி.எஸ் அணி எழுப்பும் வலுவான சந்தேகங்கள் இதுதான்....

Advertiesment
ஜெ. மரணத்தில் ஓ.பி.எஸ் அணி எழுப்பும் வலுவான சந்தேகங்கள் இதுதான்....
, புதன், 1 மார்ச் 2017 (13:31 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


 

 
தற்போது சசிகலாவிற்கு எதிராக திரும்பியுள்ள தமிழக முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர் செல்வமும் அதே கருத்தை வலியுறுத்தி வருகிறார். இது சசிகலா தரப்பிற்கு அதிர்ச்சியையும், தலைவலியையும் கொடுத்துள்ளது. இது தொடர்பாக, ஓ.பி.எஸ் அணி சமீபத்தில் ஜனாதிபதியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். மேலும், வருகிற 8ம் தேதி, ஓ.பி.எஸ் அணியினர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர்.
 
இந்நிலையில், ஜெ.வின் மரணம் தொடர்பாக, ஓ.பி.எஸ் அணியினர் எழுப்பும் சந்தேகங்களின் பட்டியல் வெளியே தெரிய வந்துள்ளது.
 
* ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ந் தேதி இரவு போயஸ்கார்டன் வீட்டில் நடந்தது என்ன?
 
* ஜெயலலிதாவிடம் ஒரு கையெழுத்து வாங்குவதற்கா வீட்டில் வைத்து மிரட்டி அவரை அடித்து கீழே தள்ளிவிட்டதாக கூறுவது உண்மையா?
 
* மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஜெ. அரை மயக்கத்தில் இருந்ததாக கூறப்படுவது உண்மையா?
 
* கறுப்பு பூனை படைக்கு கூட தெரியாமல் ஜெயலலிதாவை ஆம்புலன்சில் கொண்டு சென்றது ஏன்?
 
* ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அப்போது எங்கே சென்றிருந்தனர்?
 
* ஜெயலலிதா வீட்டில் இருந்த நர்ஸ் திடீரென காணாமல் போனது எப்படி? அப்படி கூறுவது உண்மையா?
 
* ஜெயலலிதாவின் கன்னத்தில் ரத்த காயம் வந்தது எப்படி?
 
* போயஸ்கார்டன் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ பதிவுகள் என்ன ஆனது?
 
* அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை யாருடைய உத்தரவின் பேரில்  ‘சுவிட் ஆப்’ செய்தார்கள்?
 
* ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உடன், அவரால் நீக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா குடும்பத்தினர் அனைவரும் அங்கு வந்திருந்தது எப்படி?
 
* மருத்துவமனையில் தொற்றுநோய் பரவி விடும் என யாரையும் அனுமதிக்காத நிலையில் சசிகலாவை மட்டும் எப்படி அனுமதித்தார்கள்?
 
* அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரதாப் ரெட்டி, அவரது மகள், மருமகன் ஆகியோர் முகத்தில் முகமூடி கூட போடாமல் ஜெயலலிதா அறைக்கு சென்றது எப்படி?
 
* ஜெயலலிதாவின் புகைப்படங்களை மறைப்பது ஏன்? பதிவான படங்களை வெளியிடுவதில் இனிமேல் என்ன தயக்கம்?
 
* தினமும் 2 கோடி பேர் டுவிட்டர், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் சந்தேகங்களை எழுப்பும் போது அதற்கு போயஸ்கார்டன் தரப்பில் எந்த விளக்கமும் தராதது ஏன்?
 
* ஜெயலலிதா மரணத்தில் மர்மம் கிடையாது என சசிகலா தரப்பு, வெளிப்படையாக ஆதாரங்களுடன் தெரிவிக்க மறுப்பது ஏன்?.
 
என சந்தேகங்களை ஓ.பி.எஸ் தரப்பு எழுப்பியுள்ளது. ஆனால், இதற்கெல்லாம் சசிகலா தரப்பு மற்றும் அப்பல்லோ நிர்வாகத்திடமிருந்து பதில் கிடைக்குமா என்பதுதான் கேள்வி...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரபரப்பான சாலையில் இரண்டு சக்கரங்களில் கார் ஓட்டி ஸ்டண்ட்!! வைரல் வீடியோ