Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் சசிகலா காலி: காத்திருக்கும் ஓ.பி.எஸ்

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் சசிகலா காலி: காத்திருக்கும் ஓ.பி.எஸ்
, வியாழன், 16 பிப்ரவரி 2017 (16:13 IST)
ஆளுநர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பி விடுத்ததை அடுத்து ஓ.பி.எஸ் அணி டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசியுள்ளனர்


 

 
ஏற்கனவே சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து, அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் கொண்டுவராமல் இடைக்கால பொதுச்செயலர் என ஒருவரை நியமிக்க முடியாது, என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. 
 
இந்நிலையில் இன்று பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி மைத்ரேயன் தலைமையில் அவரது ஆதரவு எம்பிக்கள் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து பேசி உள்ளனர். 
 
இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூறியதாவது:-
 
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதும் செல்லாது, தினகரன் துணை பொதுச்செயலாளராக  நியமனம் செய்யப்பட்டதும் செல்லாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சசிகலா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறோம், என்றனர்.
 
சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தால், சசிகலா பொதுச்செயலாளராக அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் செல்லாதாகவிடும், ஓபிஎஸ் அணி எளிதாக கட்சியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டும் வாய்ப்புள்ளது.
 
தற்போது ஓ.பி.எஸ் அணியினர் இந்த தேர்தல் ஆணையத்தை மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் இன்று மைத்ரேயன் தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதி கேட்டு நெடும் பயணம் ; மக்களை சந்திக்கும் ஓ.பி.எஸ்..