சசியை விட்டுவிட்டு விஜயபாஸ்கரின் குடுமியை பிடிப்பது ஏன்?: மாற்றி மாற்றி பேசும் ஓபிஎஸ்!
சசியை விட்டுவிட்டு விஜயபாஸ்கரின் குடுமியை பிடிப்பது ஏன்?: மாற்றி மாற்றி பேசும் ஓபிஎஸ்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாற்றி மாற்றி பேசுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அதன் பின்னர் அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் மர்மமாகவே விடையில்லாமல் நீடிக்கிறது.
இதனையடுத்து சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க தம்பிதுரையிடம் கூறியதாகவும். அதனை சசிகலா குடும்பத்தினர் தடுத்ததாகவும் கூறினார்.
இந்நிலையில் நேற்று பேட்டியளித்த ஓபிஎஸ், ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்லவதை அமைச்சர் விஜயபாஸ்கர் தடுத்ததாக கூறியிருந்தார். இவ்வாறு ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து ஓபிஎஸ் மாற்றி மாற்றி கருத்துக்கள் கூறி வருவது மிகவும் வேடிக்கையாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.