Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இப்தார் நோன்பில் 'பாட்ஷா' பட வசனம் பேசிய ஓபிஎஸ்!

Advertiesment
இப்தார் நோன்பில் 'பாட்ஷா' பட வசனம் பேசிய ஓபிஎஸ்!
, திங்கள், 3 ஜூன் 2019 (20:30 IST)
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது அதிமுக கூட்டணி. அந்த கூட்டணியால் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே அதுவும் இழுபறியில் கைப்பற்ற முடிந்தது. தேர்தல் தோல்விக்கு அதிமுக காரணம் என பாஜகவினர்களும், பாஜக காரணம் என அதிமுகவினர்களும் கூறி வருகின்றனர். இதனால் இந்த கூட்டணியே உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்று அதிமுக சார்பில் ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை தேர்தல் தோல்வி குறித்து குறிப்பிடும்போது, 'நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள்' என்று கூறினார். இதே வசனத்தை தான் 'பாட்ஷா' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
webdunia
ஓபிஎஸ் அவர்கள் இந்த வசனத்தை திமுக கூட்டணிக்காக பேசினாரா? அல்லது மகனுக்கு மந்திரி பதவி கொடுக்காத ஆத்திரத்தில் பாஜகவை மறைமுகமாக பேசினாரா? என்பது குறித்த விவாதங்களை நெட்டிசன்கள் டுவிட்டரில் நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை நாடாளுமன்றம்: முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா!