சசிகலாவின் 90 சதவீத ரகசியத்தை தெரிந்து வைத்திருக்கும் ஓபிஎஸ் தயங்குவது ஏன்?
சசிகலாவின் 90 சதவீத ரகசியத்தை தெரிந்து வைத்திருக்கும் ஓபிஎஸ் தயங்குவது ஏன்?
ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், ஸ்டாலின் என முக்கிய கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற இந்த மூன்று தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் திமுக வேட்பாளர் மருத்துகணேஷை ஆதரித்து அந்த கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த பிரச்சாரத்தில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியை கடுமையாக விமர்சித்தார். பல்வேறு குற்றச்சாட்டுகளை ஓபிஎஸ் மீது வைத்தார்.
ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று 40 நிமிடம் தியானம் செய்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த ஓபிஎஸ் சசிகலா பற்றி 10 சதவீதம் தான் கூறியிருக்கிறேன் இன்னும் 90 சதவீத ரகசியம் உள்ளது என்றார்.
சசிகலாவை பற்றி மீதியுள்ள 90 சதவீத ரகசியமென்ன? இதுவரை அதனை வெளியிடாமல் இருப்பதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பிய ஸ்டாலின், நான் ஓபிஎஸ்ஸை பார்த்து கேட்கிறேன், சசிகலாவின் 90 சதவீத உண்மைகளை நீங்கள் எங்கே வெளியிடுகிறீர்களோ இல்லையோ, ஆனால், ஆர்கே நகர் தொகுதியில் வெளியிட்டாக வேண்டும். உங்களால் முடியுமா? என்றார்.