குழந்தை என்று பிறந்ததோ அதுதான் பிறந்தநாள்! – தமிழக நாள் விவகாரத்தில் ஓபிஎஸ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (14:07 IST)
தமிழ்நாடு நாள் எந்த தேதியில் கொண்டாடுவது என்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட திட்டமிடப்பட்டு வரும் நிலையில் அது குறித்து குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. முந்தைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழக நாளாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நில அமைப்பியல் ரீதியாக பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஐ தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் “ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் காழ்புணர்ச்சியின் உச்சம். பத்து வருடங்கள் கழித்து குழந்தையின் பெயர் மாற்றப்பட்டாலும், குழந்தை என்று பிறந்ததோ அன்றுதான் பிறந்தநாள் கொண்டாட வேண்டுமே தவிர பெயர் வைத்த நாளை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments