Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததே கலவரத்திற்கு காரணம் - ஓ.பி.எஸ்

போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததே கலவரத்திற்கு காரணம் - ஓ.பி.எஸ்
, வெள்ளி, 27 ஜனவரி 2017 (12:26 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, சமூக விரோதிகள் நுழைந்ததே வன்முறைக்கு காரணம் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை, அங்கிருந்து வெளியேற்றும் பணியில் கடந்த 23ம் தேதி அதிகாலை தமிழக போலீசார் ஈடுபட்டனர். அப்போது, மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள திருவல்லிக்கேனி, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. மோதல் கலவரமாக மாறியது.
 
இது தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தின் போது, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மாணவர்கள் மீது தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை வீசப்பட்டதற்கு அவர் விளக்கம் கேட்டார். 
 
அவரின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:  
 
ஜல்லிக்கட்டு தொடர்பாக சென்னை மற்றும் சில மாவட்டங்களில் மாணவர்கள் அமைதியாக போராட்டம் நடத்தினர். போலீசாரும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளித்தனர். தமிழக அரசு, அவசர சட்டம் இயற்றி அதுபற்றி போராட்டக்காரர்களுக்கு விளக்கப்பட்டது. 
 
ஆனால், போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டனர். அவர்கள் போராட்டத்தை முடிக்கவிடாமல் சதி செய்தனர். போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.   போலீசார் பலமுறை எச்சரித்தும் கலைந்து செல்லவில்லை. 2 ஆயிரம் பேருக்கு மேல் கலைந்து செல்லாமல் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். 
 
போராடத்தில் சிலர் ஒசாமா பின்லேன் படத்தை வைத்திருந்தனர்.  குடியரசு தினமன்று கருப்புக் கொடி காட்டவும் அவர்கள்  திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும், தமிழர்களுக்கு தனிநாடு வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்தனர். 
 
இதனால் அவர்கள் மீது போலிசார் குறைந்த பட்ச தாக்குதலை நடத்தி கலவரத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.  இதில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த கலவரத்தில் போலீசார் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் விளக்கம் அளித்தார். ஆனால், அதை ஏற்காமல் திமுக கட்சி வெளிநடப்பு செய்தது.
போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவின் அடுத்த மூவ் என்ன? - அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.களுக்கு அவசர அழைப்பு