Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவால் தற்கொலை: மனநல ஆலோசனை வழங்க ஓபிஎஸ் அட்வைஸ்!

Advertiesment
கொரோனாவால் தற்கொலை: மனநல ஆலோசனை வழங்க ஓபிஎஸ் அட்வைஸ்!
, திங்கள், 10 ஜனவரி 2022 (10:43 IST)
கொரோனா பாதித்தோருக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கருத்து. 

 
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜ். இவருக்கு திருமணமாகி ஜோதிகா என்ற மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஜோதிகாவுக்கு சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவனை பிரிந்து வந்து தந்தை வீட்டோடு வாழ்ந்து வருகிறார்.
 
சமீபத்தில் ஜோதிகாவுக்கு இருமல், காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளா. அங்கு அவருக்கு கொரோனா சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், குடும்பத்தினருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவமனையில் அறிவுறுத்தியுள்ளனர்.
 
ஆனால் கொரோனா பாதிப்பை நினைத்து பயந்த ஜோதிகா குடும்பத்தினர் விபரீதமாக விஷமருந்தி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஜோதிகாவின் சகோதரரில் ஒருவர் மட்டும் விஷம் குடிக்காத நிலையில் மற்றவர்கள் விஷம் அருந்தியுள்ளனர். இதில் ஜோதிகா மற்றும் அவரது குழந்தை உயிரிழந்த நிலையில், ஜோதிகாவின் தாயாரும், மற்றொரு சகோதரனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து கொரோனா பாதித்தோருக்கு மனநல ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் ஓபிஎஸ் கூறியுள்ளார். மேலும் மருத்துவ ரீதியாக உதவுவதோடு மனநல ஆலோசனையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
அதோடு கொரோனா பாதிப்பை உரிய மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம் என்றும் மக்கள் அவசியமின்றி கொரோனாவை நினைத்து பயப்பட கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டில் 4,033 ஆக எகிறிய ஒமிக்ரான் தொற்று - அச்சத்தில் மக்கள்!