Publish Date: Tue, 30 Aug 2022 (17:56 IST)
Updated Date: Tue, 30 Aug 2022 (17:57 IST)
உலக கோடீஸ்வரர் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் உள்ளது என்றும் அவரது துறையில் மட்டுமே ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் ஈபிஎஸ் பிரிவில் இருக்கும் ஜெயக்குமார் அவ்வப்போது ஓபிஎஸ் மீது குற்றம் சாட்டி வருகிறார்
அந்த வகையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அதிமுக ஆட்சியில் எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு வராத நிலையில் ஓபிஎஸ் வகித்த துறையில் மட்டுமே ஊழல் புகார் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்
மேலும் உலக கோடீஸ்வரர் பட்டியலில் ஓபிஎஸ் பெயர் உள்ளது என்றும் இனி அவருடன் எந்த விதமான ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.