புழல் சிறையில் ஜெயக்குமாரை சந்தித்த ஓ பி எஸ்!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (15:46 IST)
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் சென்று சந்தித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ரூபாய் 5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 6 பிரிவுகளில் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை செய்துள்ளனர். ஜெயகுமார் மட்டுமின்றி ஜெயக்குமாரின் மகள் மருமகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ஜெயகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ பன்னீர்செல்வம் சென்று சந்தித்துள்ளார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments