தமிழக சட்டப்பேரவை வரும் 8-ஆம் தேதின் கூட உள்ள நிலையில் அவை முன்னவர் பொறுப்பு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவை முன்னவராக அப்போது ஓ.பன்னீர்செல்வம் இருந்துவந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் பிளவு வந்தபோது ஓபிஎஸ் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது ஓபிஎஸ் வகித்து வந்த அவை முன்னவர் பதவி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிமுக அணிகள் இணைந்து ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 8-ஆம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், இரு அணிகளும் இணைந்துவிட்டதால், அவை முன்னவர் பொறுப்பு அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்டு மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.