வன்னிய இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினேனா? ஓபிஎஸ் விளக்கம்!

Webdunia
வியாழன், 7 ஜனவரி 2021 (12:46 IST)
சாதி மக்கள் தங்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக வினர் தலைமையில் வன்னிய மக்கள் தங்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுக்காக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் காலம் என்பதால் அதிக சீட்களை வாங்குவதற்காகவே இந்த போராட்டங்களைப் பாமக முன்னெடுப்பதாக விமர்சனங்களும் உள்ளன. இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பேசியுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதை மறுக்கும் விதமாக ஓபிஎஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் ‘வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments