Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ் நீக்கம்...

Advertiesment
அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஓ.பி.எஸ் நீக்கம்...
, செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (12:57 IST)
அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.


 

 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. சசிகலா, தினகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவர்களுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர். இன்று மாலைக்குள் அவர்கள் கர்நடக உயர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது...
 
இந்நிலையில், அதிமுகவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் களம் இறங்கிய சசிகலா தரப்பு, எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, அதிமுக சார்பில் அவரே தமிழக முதல்வராக முன்னிறுத்தப்படுவார் எனத் தெரிகிறது.. 
 
மேலும், சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கிய, ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா தரப்பு நீக்கி உத்தரவிட்டுள்ளது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது..
 
தற்போது அவர் காபந்து முதலமைச்சராக உள்ளார். மேலும், எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  அவருக்கு இதுவரை 11 அதிமுக எம்.பிக்கள் மற்றும் 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில்தான் அவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி பழனிச்சாமி அடுத்த முதலமைச்சராக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!