ஓபிஎஸ் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தள்ளுபடி: பெரும் பரபரப்பு!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (12:12 IST)
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையில் இரண்டு பிரிவுகளிலும் இருக்கும் ஆதரவாளர்கள் அவ்வப்போது மோதிக் கொள்ளும் காட்சிகளை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் அடுத்தடுத்து அதிமுகவின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியில் மாவட்ட செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர்கள் தலைமை நிர்வாகிகள் மட்டுமே மண்டபத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் தொண்டர்களுடன் ஓபிஎஸ் வந்தபோது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றைய ஆலோசனைக் கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments