Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவிக்க வந்த சரத்குமாரை துரத்திய போராட்டக்காரர்கள்

ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவிக்க வந்த சரத்குமாரை துரத்திய போராட்டக்காரர்கள்
, செவ்வாய், 17 ஜனவரி 2017 (21:08 IST)
அலங்காநல்லூரில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவாக இளைஞர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்றார்.

அப்போது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து  காலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சோழவந்தான் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை உடனடியாக வெளியே செல்ல கோஷமிட்டனர். இதனால் அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.மேலும் அதிமுகவினர்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், போராட்டக்காரர்கள் உடனடியாக இவரை வெளியேற சென்னார்கள். இதனையடுத்து அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பிற்கு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ”எனது சொந்த ஊர் பரவை அருகே உள்ளது. நாங்களும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகிறோம். சிலரது தூண்டுதல் காரணமாக இதுபோல் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. சுய நலநோக்கம் மற்றும் அரசியல் காரணமாக வரவில்லை. தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எனது ஆதரவை தெரிவிப்பேன்” என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்சாரம் துண்டிக்கப்பட்டும் செல்போன் டார்ச் அடித்து போராடும் இளைஞர்கள்!