Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க.ஸ்டாலின் முதல்வராக 51 சதவீதம் பேர் ஆதரவு - கருத்துக்கணிப்பில் தகவல்

மு.க.ஸ்டாலின் முதல்வராக 51 சதவீதம் பேர் ஆதரவு - கருத்துக்கணிப்பில் தகவல்
, வியாழன், 26 ஜூலை 2018 (13:13 IST)
தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக செயல்தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் வர வேண்டும் என குறிப்பிட்ட சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

 
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தமிழகமும் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கருத்துக்கணிப்பை நடத்தியது.  குறிப்பாக, தமிழகத்தில் அடுத்த முதல்வராக யாரை நீங்கள் விரும்புகிறீர்கள்? என்கிற கேள்வி கொடுக்கப்பட்டது.
 
அதற்கு 51 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி -ஓபிஎஸ் தரப்புக்கு 25 சதவீதம் பேரும், டிடிவி தினகரன், ரஜினிகாந்த் ஆகியோருக்கு 6 சதவீதம் பேரும், கமல்ஹாசனுக்கு 5 சதவீதமும், அன்புமணிக்கு 4 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்றவர்களுக்கு 3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
webdunia

 
அதேபோல், மோடியின் அரசால் தமிழகம் எந்த பலனையும் பெறவில்லை என 61 சதவீதம் பேரும்,  அதிமுக ஆட்சி சரியில்லை என 35 சதவீதம் பேரும், சராசரி என 28 சதவீதம் பேரும், நன்று என 11 சதவீதம் பேரும், மோசம் என 16 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
மேலும், 2016ம் ஆண்டு கொடுத்த வாக்குறுதியை அதிமுக அரசு காப்பாற்றியுள்ளதா? என்ற கேள்விக்கு, ஆம் என 11 சதவீதமும், ஓரளவு என 28 சதவீதமும், இல்லை என 61 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் போலீஸ் : ஊழியர்களை தாக்கிய கணவர் கைது