Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஓட்டல்களை மூட உத்தரவா? ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (16:31 IST)
சென்னையில் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்களும், தமிழகத்தில் தினமும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
எனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.ஹோட்டல்களில் பார்சல் மட்டுமே அனுமதி என்று உத்தரவு என்று வழங்கப் பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஓட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
தற்போது ஓட்டல்களில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து சாப்பிட வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் சாப்பிட அனுமதி இல்லை என்ற உத்தரவு பிறப்பித்தால் ஹோட்டல்களில் வியாபாரம் பெரும் வீழ்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments