Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் டிரான்ஸ்பர் மட்டுமே: பதிவுத்துறை ஐஜி உத்தரவு

Advertiesment
சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் டிரான்ஸ்பர் மட்டுமே: பதிவுத்துறை ஐஜி உத்தரவு
, செவ்வாய், 22 ஜனவரி 2019 (08:45 IST)
சொத்துக்கள் வாங்கும்போதும் விற்கும்போதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் பதிவுக்கட்டணம் முதலில் ரொக்கமாக செலுத்தப்பட்டது. ஆனால் .தமிழ்நாடு முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பண பரிமாற்றம் செய்வதால் லஞ்சம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த பத்திரப் பதிவிற்கான பதிவு கட்டணத்தை, வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.

பத்திரப் பதிவு செய்ய நிலம் மற்றும் மனைகளின் மதிப்பிற்கு ஏற்ப பதிவு தொகைக்கான பணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலையாக பெற்று, அதை, சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறை தமிழகம் முழுவதிலும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பின்பற்றப்பட்டு வந்தது

webdunia
இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் அதாவது ஜனவரி 24 முதல் தமிழகம் முழுவதிலும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் ரூ.5000/-க்கு மேல் உள்ள தொகைக்கு இனி வங்கி வரைவோலை கொடுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக பத்திரப்பதிவு கட்டணத்தை ஆன்லைன் மூலமாக மட்டுமே டிரான்ஸ்பர் செய்ய வேண்டும் என்றும் பதிவுத்துறை ஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடைமுறை கிராமப்பகுதிகளில் சாத்தியமா? என கேள்விகள் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓ.பி.எஸ்.ஸுக்கு எல்லாம் தெரியும் – மாட்டிவிட்ட விஜயபாஸ்கர்…