Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆன்லைன் ரம்மி...மற்றொரு இளைஞர் தற்கொலை...காமெடி நடிகரின் விளம்பரத்துக்கு எதிர்ப்பு

Advertiesment
ஆன்லைன் ரம்மி...மற்றொரு இளைஞர் தற்கொலை...காமெடி நடிகரின் விளம்பரத்துக்கு எதிர்ப்பு
, செவ்வாய், 3 நவம்பர் 2020 (16:28 IST)
சில நாட்களுக்கு முன் ஆன்லைன்  ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த விரக்தியில் வங்கி உதவியாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து இன்று கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற  இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக பல்வேறு தர்ப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக  விராட் கோலி, தமன்னாவுக்கு கோர்ட் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
webdunia

இந்நிலையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் சதீஸ் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ளதைச் சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத உணர்வை புண்படுத்தியதாக........ சூப்பர் ஸ்டார் மீது போலீஸில் புகார் !