Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு 3 மணிக்கு துவக்கம்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:15 IST)
பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
 
பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு வழங்கியது. 
 
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை, மாடுபிடி வீரர் விவரம் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். madurai.nic.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். 
 
ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்: 
ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்திற்குள் பார்வையாளர்களாக 150 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
 
பார்வையாளராக பங்கேற்கும் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.
 
மைதானங்களில் காளைகளை அடக்க சுழற்சி முறையில் மொத்தம் 300 வீரர்களுக்குள் அனுமதிக்கப்படலாம். மாடுபிடி வீரர்களும் தடுப்பூசி செலுத்தியிருத்தல் அவசியம்.
 
ஜல்லிக்கட்டில் இடம்பெறும் காளைகளை நிர்வகிக்க மாட்டின் உரிமையாளருடன், உதவியாளராக மற்றொரு நபர் அனுமதிக்கப்படுவார். இருவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம்.
 
போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும்.
 
இதுதவிர மாடுபிடி மைதானத்தில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments