Publish Date: Mon, 27 Sep 2021 (11:22 IST)
Updated Date: Mon, 27 Sep 2021 (12:12 IST)
தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.
பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. தமிழக அரசின் உதவி மையங்களில் ஆன்லைன் மூலம் அக்டோபர் 17 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் 1,74,930 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்தனர். ஆனால் மொத்தம் 1,51,870 இடங்கள் உள்ளன. இதனால் கலந்தாய்வுக்கு முன்பாகவே 12837 இடங்கள் காலியாகியுள்ளன.