ஒரே பாமக.. ஒரே தலைவர்! அது நான்தான்..! - அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்!

Prasanth K
வெள்ளி, 13 ஜூன் 2025 (13:31 IST)

பாமக கட்சியில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் தொடர்ந்து வந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்துள்ள முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் பணிகளுக்கான ஆயத்தமாக மகாபலிபுரத்தில் பாமக மாநாட்டை நடத்தியது. அதற்கு முன்பிருந்தே கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே முட்டல் மோதல் தொடர்ந்து வந்தது.

 

மாநாட்டிற்கு பிறகு இந்த முரண்பாடு அதிகரித்த நிலையில் சமீபத்தில் ராமதாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேரடியாகவே அன்புமணி மற்றும் அவரது மனைவி சௌமியாவை தாக்கி பேசி வருகிறார். மேலும் அன்புமணி தலைவர் பதவிக்காக தன்னிடம் சண்டை போடுவதாக பேசியிருந்தார்.

 

அதை தொடர்ந்து இருவருக்கும் இடையே சமாதானம் செய்யும் முயற்சியையும் பாமக குழுவினர் மேற்கொண்ட நிலையில் அது தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.

 

இந்நிலையில் தற்போது செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “2026 தேர்தலுக்குப் பிறகு தலைவர் பொறுப்பை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால், அவரது செயல்பாடுகளை பார்க்கும் போது, என் மூச்சு அடங்கும் வரை தலைவராக தொடர்வேன்” என்று கறாராக பேசியுள்ளார். 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

பாலியஸ்டரை பட்டு என ஏமாற்றி திருப்பதி கோவிலுக்கு விற்பனை.. 10 ஆண்டுகால மோசடி கண்டுபிடிப்பு..!

அன்னைக்கு சட்டைய கிழிச்சிட்டு நின்னீங்க!.. ரிசல்ட்டுக்கு அப்புறம்!.. பழனிச்சாமி ராக்ஸ்!..

தமிழகத்திற்கு அடுத்தடுத்து வரும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி.. நடைப்பயணம், பேரணி நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments