Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

Kallakurichi

Senthil Velan

, வெள்ளி, 28 ஜூன் 2024 (17:19 IST)
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு  உடல் நலக் குறைவு ஏற்பட்டது.  இதையடுத்து சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.


மேலும் பலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!