புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் என்னென்ன மாற்றம்?

Webdunia
சனி, 31 டிசம்பர் 2022 (12:15 IST)
புத்தாண்டு தினத்தன்று சில போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.


புத்தாண்டு தினத்தன்று மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை மற்றும் நகரின் பிற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து ஏற்பாடுகளை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

ஃபோர்ஷோர் சர்வீஸ் சாலை மற்ற கட்டுப்பாடுகளுடன் டிச. 31, ஜன. 1, 2023 இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும். இதற்கிடையில், டிச., 31 மற்றும் புத்தாண்டு தினத்தன்று, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக காவல்துறையும் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் இரண்டு நாட்களும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பணியில் இருப்பர். புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் கூடாது என்றும், இரண்டு நாட்களும் மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments