Publish Date: Tue, 11 Apr 2023 (13:41 IST)
Updated Date: Tue, 11 Apr 2023 (14:15 IST)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகாத நிலையில் கடந்த சில நாட்களாக ஓரிரு உயிர்கள் பலியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரே நாளில் இருவர் கொரனாவால் உயிரிழந்தனர் என்பதும் நேற்று கூட ஒருவர் பலியானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாவும் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சையின் பலன் இன்றி உயிர் இழந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் தினமும் உயிர்ப்பலி ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.