முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்புகள் சார்பில் ஒருநாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் சங்க உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இருக்கும்போது தங்களது சுய விளம்பரத்துக்காக சில நிர்வாகிகள் முதல்வரின் நிவாரண நிதி தொடர்பான தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார் என்று அரசு ஊழியர்கள் தங்களை அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.