ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பியவர் கைது!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (18:16 IST)
ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆன்லைன் வகுப்பில் மாணவி பெயரில் இணைந்து ஆபாச செய்தியை மர்ம நபர் ஒருவர் அனுப்பியுள்ளார். ஆபாச செய்தி மற்றும் படங்களை அனுப்பியவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த மோகன் குமார் என்பது சைபர் க்ரைம் போலீசார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார் 
 
ஆன்லைன் வகுப்புக்கான குரூப்பில் இணைந்து மாணவிகள் செல்போன்களுக்கு அவர் ஆபாச படம் அனுப்பியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மாணவிகளின் ஆன்லைன் குரூப்பில் அவர் எப்படி இணைந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்