Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் ஆணவக்கொலை - காதலனின் சகோதரியை வெட்டி கொலை செய்த பெண்ணின் தந்தை

Advertiesment
சாதி ஆணவ படுகொலை
, வெள்ளி, 13 மே 2016 (17:25 IST)
திருநெல்வேலி மாவட்டத்தில், தனது மகள் காதல் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, காதலலின் தந்தையை பெண்ணின் தந்தை வெட்டிக்கொலை செய்துள்ளார்.
 

 
திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தலித் இளைஞர் விஸ்வநாதன். இவர் இரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த வேறொரு சாதிப் பிரிவைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் காவேரியை காதலித்து வந்துள்ளார்.
 
இதற்கு காவேரியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து கடந்த 3ஆம் தேதி விஸ்வநாதனும் காவேரியும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகினர்.
 
இந்நிலையில் காவேரியின் தந்தை விஸ்நாதனின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தார். இதுகுறித்து விஸ்வநாதன் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்தனர். ஆனால் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
 
இந்நிலையில் ஆத்திரம் அடங்காத காவேரியின் தந்தை விஸ்வநாதனின் சகோதரி கல்பனாவை வெட்டிக்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
உடுமைலையில் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் ஏற்படுத்தி அதிர்ச்சியலைகள் அடங்குவதற்குள் தமிழகத்தில் மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை அறங்கேறி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்: எப்படி?