Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கல் நாளில் நமது பொறுப்புகளும் கூடியிருக்கிறது! – கனிமொழி எம்.பி பகிர்ந்த பொங்கல் வாழ்த்து வீடியோ!

Advertiesment
பொங்கல் நாளில் நமது பொறுப்புகளும் கூடியிருக்கிறது! – கனிமொழி எம்.பி பகிர்ந்த பொங்கல் வாழ்த்து வீடியோ!

Prasanth Karthick

, திங்கள், 15 ஜனவரி 2024 (09:59 IST)
இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நிலையில் திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.



தை முதல் நாளில் உழவர் திருநாளான பொங்கல் திருநாள் தமிழ்நாடு முழுவதும் சாதி, மத பேதமற்று சமத்துவ பொங்கலாக அனைத்து மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மக்களுக்கு பல அரசியல் தலைவர்களும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழியும் பொங்கல் வாழ்த்துக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “சாதி பேதம் கடந்து அனைத்து மக்களும் தமிழர்களாக மனிதர்களாக ஒன்றிணைந்து கொண்டாடக்கூடிய திருநாள் இந்த தை பொங்கல் திருநாள்.
மகிழ்ச்சி பொங்கிடும் இந்த திருநாளில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்புகளும் கூடியிருக்கிறது. கடந்த மாதம் சென்னை பெருமழை, தென் மாவட்டங்களில் மிகப்பெரும் வெள்ளப்பாதிப்பு ஆகியவற்றால் மக்கள் பட்ட வேதனைகளை பார்த்தோம்.



இந்த இரண்டுமே பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய பாதிப்புகள் என்பதை நாம் உணர வேண்டும். இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து நமது எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதை இந்த பொங்கல் திருநாளில் உறுதிமொழியாக ஏற்போம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “ஓயாது ஒளி வீசும் உதயசூரியனையும், உயிரெனக் கொண்டிருக்கும் தமிழையும், மெய்யெனப் பற்றியிருக்கும் தமிழ்நாட்டையும் கொண்டாடிடப் பிறக்கும் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள், அனைவருக்கும் சிறப்புற அமைய எனது வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் திருநாள்: தமிழகம் முழுவதும் மக்கள் பொங்கல் பொங்கி கொண்டாட்டம்!