சென்னை அருகே உள்ள கிளாம்பாகத்தில் இருந்து அனைத்து அரசு பேருந்துகளும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து அரசு பேருந்துகளும் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க மாட்டோம் என்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் இயக்குவோம் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு போதிய வசதியை அரசு செய்து தரவில்லை என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஓலா, ஊபர் மூலம் கோயம்பேட்டிலிருந்து கிளம்பாக்கம் செல்ல 1500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்றும் இதனால் மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.
பேருந்துகளை நிறுத்த பார்க்கிங் ஒதுக்கப்படவில்லை என்றும் போதிய வசதிகளை செய்து கொடுத்த பிறகு ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்குவோம் என்றும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 24ஆம் தேதி முதல் நகருக்குள் ஆம்னி பேருந்துகள் வரக்கூடாது என்று அரசு விடுத்துள்ள உத்தரவை இப்போது எங்களால் ஏற்க முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.