Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு சுவாச பாதை தொற்று! – வெளியான அதிர்ச்சி அறிக்கை!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:55 IST)
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் வைரஸால் குழந்தைகளுக்கு சுவாச பாதை தொற்று உருவாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வெவ்வேறு திரிபுகளாக உருமாற்றம் அடைந்து பலரை பாதித்து வருகிறது. தற்போது புதிதாக பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் வைரஸானது மற்ற வேரியண்டுகளை காட்டிலும் வேகமாக பரவக் கூடியதாக உள்ளது.

தற்போது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைகழகம், நார்த்வெஸ்டர்ன் பல்கலைகழகம்  நடத்திய ஆய்வில் ஒமிக்ரான் வைரஸால் குழந்தைகளுக்கு சுவாச பாதை தொற்று ஏற்படும் அபாயத்தை கண்டறிந்துள்ளனர்.

கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 வயதிற்குட்பட்ட 18,849 குழந்தைகளிடம் மேற்கொண்ட சோதனையில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவுவதற்கு முன்பாக மேல் சுவாச பாதை தொற்று 4 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரான் பாதிப்பிற்கு பின்னர் 2 வயது குழந்தைக்கு கூட சுவாச பாதை தொற்று ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

மேல் சுவாச பாதை தொற்று ஆகியவற்றால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 21.1 சதவீதம் பேர் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். ஒமைக்ரான் வைரஸ் நுரையீரல், உயிரணுக்களில் குறைவான திறமையாகவும் சுவாச பாதைகளில் மிகவும் திறமையாகவும் பிரதிபலிப்பதால் மேல் சுவாசப்பாதை தொற்று கடுமையாக இருக்கலாம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments