Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு தர்ம அடி

Advertiesment
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு தர்ம அடி
, சனி, 9 ஜூலை 2016 (10:14 IST)
சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வக்கிர புத்தி கொண்ட முதியவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


 
 
சென்னை, எம்.ஜி.ஆர்.நகர், கண்ணகி தெருவை சேர்ந்தவர் ஜெயகுமார். 66 வயதான இவர் ராயப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வது வழக்கம். அங்கு செல்லும் அவர் அங்குள்ள சிறுமிகளிடம் சகஜமாக பழகுவார்.
 
சிறுமிகள் அவரை தாத்தா, தாத்தா என அழைப்பது வழக்கம், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணிய அவர், 6-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை தனியாக அழைத்து பேசியுள்ளார்.
 
தனியாக சிறுமிகளிடம் பேசிக்கொண்டிருந்த அவர் பாலியல் ரீதியாக அவர்களை அனுகியுள்ளார். முதியவர் தங்களிடம் தவறாக நடப்பதை உணர்ந்த சிறுமிகள் சத்தமிட்டு அருகில் உள்ளவர்களுக்கு உணர்த்தினர்.
 
அருகில் உள்ளவர்கள் அங்கு வந்து முதியவருக்கு தர்ம அடி கொடுத்து, அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருநங்கைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு