Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உன் ஓசி டிக்கெட் எனக்கு வேணாம்..!? நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த ‘சுயமரியாதை’ பாட்டி!

Advertiesment
Video
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (13:47 IST)
இலவச பேருந்தில் டிக்கெட்டுக்கு காசு வாங்கும்படி நடத்துனரிடம் பாட்டி ஒருவர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.

கடந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சியமைத்த நிலையில் நகர, உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் சமீபமாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இலவச பேருந்தில் ஏறிய பாட்டி ஒருவர் டிக்கெட்டிற்கு பணம் தருகிறார். அதற்கு பேருந்து நடத்துனர் இது இலவச பேருந்து என்றும், பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க தேவை இல்லை என்றும் விளக்கமளிக்கிறார்.


அதற்கு அந்த பாட்டி, தனக்கு இலவசமாக எதுவும் வேண்டாம் என்றும், டிக்கெட்டிற்கு எவ்வளவோ அந்த பணத்தை கொடுப்பேன் என்றும் அடம்பிடித்து பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளார்.

சமீபத்தில் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் குறித்து அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை : அதிரடி உத்தரவு!