Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அறநெறி தவறும் அதிகாரிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் - எடப்பாடி பழனிசாமி

Advertiesment
Edappadi Palaniswami
, வெள்ளி, 20 அக்டோபர் 2023 (13:30 IST)
ஆளும் விடியா திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணை போகாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கும் வகையில் சுதந்திரமாக சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
 
30 ஆண்டுகால அஇஅதிமுக ஆட்சியில், ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக போற்றப்பட்ட தமிழகக் காவல்துறை, மக்களை அச்சுறுத்தி வந்த சட்ட விரோதிகளை ஒழித்த காவல்துறை, இன்றைக்கு திராவக மாடல் ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி சீரழிந்து வருவது கண்டு மக்கள் கொதிப்படைந்து போயுள்ளனர். கடந்த 29 மாத கால பொம்மை முதலமைச்சர் திரு. மு.க.  ஸ்டாலின்  ஆட்சியில், நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து மக்கள் அஞ்சி அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளதை அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றனர்.
 
தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் திரு. ஸ்டாலின் சொல்கிறார் என்றால், ஆமாம்.. ஆமாம்... என்று ஆமாஞ்சாமி போட்டு முழு பூசணிக்காயை தட்டு சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள்.
 
தங்களை வஞ்சிக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்டும் தருணத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். விடியா திமுக ஆட்சியின் தாளத்திற்கு, மக்கள் விரோதச் செயல்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்; தி.மு.க. இடும் கட்டளைக்கு தலையாட்டி, அறநெறி தவறும் அதிகாரிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று  அதிமுக  சார்பில் எச்சரிக்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளியங்கிரி FPO-க்கு இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய விருது வழங்கி கெளரவிப்பு! - விவசாய உறுப்பினர்களுக்கு சத்குரு வாழ்த்து